BREAKING NEWS

Sep 8, 2013

'கதை ரெடி பண்ணுங்க!'- ஷங்கருக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

'கதை ரெடி பண்ணுங்க!'- ஷங்கருக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

சென்னை: கோச்சடையான் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்த ரஜினி, அதற்கான கதையை தயார் செய்யுமாறு ஷங்கரிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது கோச்சடையான் படத்தின் வேலைகளை முடித்துவிட்டார். அடுத்து அவர் ஈராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்குத்தான் படம் பண்ணுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஆனால் கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் ரஜினிக்கு எவ்வளவு கொடுத்தாவது தங்கள் நிறுவனத்துக்காக ஒரு படம் தயாரிக்க காத்திருக்கிறது. 

தயாரிப்பாளர் யார் என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம், முதலில் இயக்குநரைத் தீர்மானிக்கலாம் என முடிவு செய்த ரஜினி, உடனடியாக ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.

ஐ பட வேலைகள் குறித்து விசாரித்த ரஜினி, அது டிசம்பருக்குள் முடிந்துவிடும் என்பதைத் தெரிந்து கொண்டு, உடனடியாக தனக்காக ஒரு கதையைத் தயார் செய்யுமாறு கூறினாராம். ஷங்கருக்கு இது ஆனந்த அதிர்ச்சியாகிவிட்டதாம். காரணம், நண்பன் முடிந்த பிறகு ரஜினியை மீண்டும் இயக்கக் காத்திருந்தார் ஷங்கர். ஆனால் ரஜினி உடல்நிலை, கோச்சடையான் படம் போன்றவை காரணமாக, ஐ படத்தை ஆரம்பித்துவிட்டார்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &