BREAKING NEWS

Sep 1, 2013

இலங்கை தொடர்ந்தும் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலில் பிரகாரம் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது.

இந்த தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, பங்களாதேஷ், ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

இதேவேளை சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இங்கிலாந்தின் அலக்ஸ் கேல்ஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பிரண்டன் மெக்கலம், ஷேன் வொட்சன், டேவிட் வோணர், மார்ட்டின் கப்டில், விராட் ஹோலி மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

இதனிடையே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சகதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி வீரர் மொஹமட் ஹபீஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஷகிப் அல் ஹசன், ரவீந்திர ஜடேஜா, ஷேன் வொட்சன், மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &