BREAKING NEWS

Aug 24, 2013

"அமைதி" பதாகை அகற்றப்படக் கூடாது: நீதிமன்றம் உத்தரவூ

பறகஹதெனிய பள்ளிவாசல்களுக்கு முன்னால் அமைந்துள்ள எதிர்வரும்  "அமைதி பள்ளிவாயல் முன்னால்" எனும் பதாகை உரிய இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் விசாரணை முடியும் வரை அதனை அகற்றக் கூடாது என  பிலெஸ்ஸ மஜிஸ்ட்ரேட் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

இப்பதாகையை மாவத்தகம பொலிஸார் 12-08-2013 மு.ப 10. மணி அளவில் அகற்றுவதற்காக வருகை தந்து அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் பின்னர் பதாகை அகற்றும் செயற்பாடு கைவிடப்பட்டதுடன் மாவத்தகம  பிரதம பொலிஸ் அதிகாரி இப்பதாகையை அகற்றுவதற்காக பிலெஸ்ஸ மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் குற்றவியல் வழக்கு விசாரணைக் கோவையின் 106 (1) இற்கு அமைவாக உடனடியாக இப்பதாகையை அகற்றுவதற்கு அனுமதிகோரி வழக்குதாக்கல் செய்யப்பட்டதுடன் அதற்கிணைவாக குறித்த  நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படாது நிபந்தனையடிப்படையில் 14 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தீரப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும் பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகளது ஒன்றுகூடலின் மூலம் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டு இது சம்பந்தமான பூரண விளக்கம் ( வெள்ளையர் ஆட்சி காலம் தொட்டு இன்று வரை வீதிப் போக்குவரத்துச் சபையின் அங்கீகாரச் சான்றுகளுடன்  நிரந்தரமாக இருந்து வருவதற்கான நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஆவணங்களை சட்டத்தரணி ஊடாக நேற்று 23-0-8-2013 வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தனர்) நீதிமன்றில் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு பிலெஸ்ஸ மஜிஸ்ட்ரேட் உத்தரவூ பிரப்பித்துள்ளார். 

அத்துடன் மாவத்தகம பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் அதிகாரி இப்பதாகையை அகற்றுவதற்காக முன்வைத்த சகல காரணிகளும் போலியானவை என்பதும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொது பல சேனாவினால்  கடந்த 11.08.2013 அன்று குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம் ஒன்றில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர், பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாகச் செல்லுங்கள் என்ற  விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றா விட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும் எனவும் அங்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &