
ஏறாவூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட நான்காம் வட்டாரப் பகுதியிலுள்ள வாளியப்பா தைக்கா வீதிப் பகுதியில் இன்று காலையில் காகங்களும் ,நாய்களும் துடி துடித்து மயக்கமுற்று இறக்கத் தொடங்கின.
ஏன் இவ்வாறு இப்பிராணிகள் இறக்கின்றன என்று பொதுமக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
இதனால் வளர்ப்பு நாய்களுக்கு தேங்காய்ப் பால் கொடுத்து உயிரிழப்பிலிருந்து பாதுகாத்து வருவதாக சம்பந்தப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.



