BREAKING NEWS

Jul 14, 2013

கண்டி ஜ. மாளிகையில் அதான், தொழுகை


கிழக்கு மாகாண சபை நெருக்கடி தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று சனிக்கிழமை,13 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கண்டி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அங்கு இப்தார் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளன. நோன்பு திறப்பதற்கான அதான் (பாங்கு) சொல்லப்பட்டவுடன் முஸ்லிம் அமைச்சர்கள் நோன்பு திறந்துள்ளனர். அவர்களுடன் சில நிமிடங்கள் இருந்துள்ள ஜனாதிபதி, பின்எழுந்து சென்றுள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் மஹ்ரிப், இஷா தொழுகைகளை இணைத்து இமாம் நடாத்தியுள்ளார்.

பின்னர் இரவு நேர விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதியும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &