சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. முகமது இஸ்மாயில் என்பவரின் பெயரில் வந்த கடித்தத்தை பிரித்துப் படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, எங்கள் தமிழ் இன மக்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொலை செய்யாமல் விட மாட்டோம், எங்கள் மண்ணில் இருந்து தூதரகத்தை அகற்றவில்லையென்றால் 15ம் தேதி (நாளை) தூதரகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூதரக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.