BREAKING NEWS

Jun 15, 2013

‘விநாயகம் பிரதர்ஸ்’ அஜித் படத்தின் தலைப்பு

ajith-in-2013

அஜீத் படத்திற்கு தலைப்பு வைப்பதென்பது ஆகாசத்தில் நீச்சல் அடிப்பது மாதிரி ரொம்பவே கஷ்டமான விஷயம். படமே முடியப்போகிறது. இன்னும் தலைப்பு வைக்க முடியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். தலைப்பை சொல்லுங்கய்யா என்று ரசிகர்கள் பேய் கூச்சல் போட்டு போராட்டம் நடத்துகிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை.

ஆனால் சிறுத்தை பட இயக்குனர் சிவா, அடுத்து அஜீத்தை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படத்திற்கு அதற்குள் தலைப்பு வைத்துவிட்டாராம். இந்த தலைப்புக்கு அஜீத்தும் ஒப்புதல் அளித்து விட்டார் என்பதுதான் ஆச்சர்யம்.

அஜீத்துடன் விதார்த் மற்றும் சில சில்லுவண்டி நடிகர்கள் நடிக்கும் படம்தான் இது. வலுவான அண்ணன் தம்பிகள் கதை என்கிறார்கள். கதையையும் ஒரு வார்த்தையில் குறிக்கிற மாதிரியிருந்தால் அமர்க்களமாக இருக்குமே என்று நினைத்த சிவா, படத்திற்கு ‘விநாயகம் பிரதர்ஸ்’ என பெயர் சூட்டினாராம்.

அப்படியென்றால் படத்தில் அஜீத்திற்கு விநாயகம் என்று பெயர் வைத்திருக்கிறாரோ?

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &