BREAKING NEWS

Jun 30, 2013

தாமதமாக கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!



தற்போதைய காலத்தில் திரைநட்சத்திரங்கள் பலர் 40 வயதிற்கு மேல் கருத்தரித்து, குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் இது அனைவருக்குமே நடக்கும் என்று நினைக்க வேண்டாம். 40 வயதிற்கு மேல் கருத்தரித்தால், ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்காக கர்ப்பமாகவே முடியாது என்பதில்லை.

ஆனால் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தால், ஒருசில பிரச்சனைகள் வரக்கூடும். அதைப் பற்றி அனைவருமே தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 

ஏனெனில் தற்போது பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்தபின்னர் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். மேலும் நல்ல நிலையை அடைய 35-40 வயதாகிவிடுகிறது.

இதற்கு பின்னர் முயற்சித்தால், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அத்தகைய ஒத்துழைப்பு சிலருக்கு இருக்கும், சிலருக்கு இருக்காது. ஏனெனில் 35 வயது வந்தாலே, உடலில் பல மாற்றங்கள் நிகழும். மேலும் இந்த வயதில் தான் பல நோய்கள் உடலை எளிதில் தாக்கும். 

இப்போது தாமதமாக குழந்தையைப் பெற்றுக்கொள்ள நினைத்தால், என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைப் பார்ப்போம்.


கருத்தரிப்பதில் பிரச்சனை
பெண்கள் பிறக்கும் போதே, கருப்பையில் ஏற்கனவே அனைத்து முட்டைகளும் இருக்கும். கருப்பையில் உள்ள இத்தகைய முட்டைகள் மாதவிடாய் சுழற்சியின் போது வளர்ச்சியடையும். ஆகவே 35 - 40 வயதிற்கு மேல் கருத்தரிக்க முயற்சிக்கும் போது, கருப்பையில் உள்ள முட்டைகளுக்கும் 35 - 40 வயதாவதால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.

குறைவான ஹார்மோன் செயல்பாடு
35 - 40 வயதான பின்னர், இறுதி மாதவிடாயானது நெருங்குவதால், உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடானது குறையும். எனவே கருத்தரிக்க உதவும் ஹார்மோன்கள் சீராக செயல்பட முடியாமல் போகும்.


நார்த்திசு கட்டிகள்
வயதாகிவிட்டதால், இனப்பெருக்க மண்டலத்தில் பிரச்சனைகளான நார்த்திசு கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்றவை உருவாகும். இதனால் கருத்தரிக்க முயற்சிக்கும் போது தடை ஏற்படும்.


நாள்பட்ட நோய்கள்
40 வயது ஆகிவிட்டால், உடலும் வேகமாக முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். அதனால் தான், நாள்பட்ட நோய்களான நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. இத்தகைய நோய்கள் உடலில் வந்தால், அவை கர்ப்பமாவதில் பிரச்சனையை உண்டாக்கும்.


குழந்தை இடம் மாறிய கர்ப்பம்
சற்று வயதான பின்னர் கர்ப்பமானால், குழந்தை இடம் மாறிய கர்ப்பத்தைப் பெற நேரிடும்.


குரோமோசோம் குறைபாடு
தாமதமாக கர்ப்பமானால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு குரோமோசோமில் குறைபாடு ஏற்பட்டு, மரபணு சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.

புற்றுநோய்
தாமதமாக கருத்தரிப்பது, புற்றுநோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். குறிப்பாக மார்ப்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

இதய அழுத்தம்
40 வயதிற்கு மேல் கருத்தரித்தால், பிரசவத்தின் போது இதயத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்கும். அதிலும் 1000 கிலோமீட்டர் வேகத்தில் இதயத்தில் இதயமானது துடிக்கும். இந்த வயதில், இத்தகைய வேகம் இதயத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.


பிறப்பு குறைபாடு
பெரும்பாலும் தாமதமாக கருத்தரித்தால், குறைபிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு குறைப்பிரசவம் நடந்தால், அவை குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும். அதிலும் 40 வயதிற்கு மேல் கருத்தரித்த பெண்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிறப்பு குறைபாடு என்றால் இதய கோளாறு ஆகும்.


BUMS (Hons), Adv. Dip. in Couns. Psychology,
Dip. in Panchakarma & Therapeutic Massage

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &