நாட்டில் அதிகரித்து வரும் கசினோ சூதாட்ட நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்கள் என்பன எதிர்கால சந்ததிகளின் ஒழுக்க விழுமியங்களை பாதிக்கும் என்பதால் இவை முற்று முழுதாக தடை செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சகல சமயங்களிலும் தடுக்கப்பட்டுள்ள இப்பாவச் செயல்கள் சமய ஒழுக்கங்களை பாரிய அளவு பாதிப்பதால் இவை எக்காலத்திலும் அனுமதிக்கப்பட முடியாதவையாகும்.
சுபீட்சமான வாழ்க்கையை எதிர்பார்க்கும் ஒவ்வொரு பிரஜையும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை தடை செய்ய வேண்டும் கருத்து கூறியுள்ளது.