வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் வடமாகாண சபையின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை தேர்தலில் வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பதனையும் புலம்பெயர் தமிழர்களே தீர்மானித்து வருவதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தேர்தலில் அதிகளவு சட்டத்தரணிகளை வேட்பாளர்களாக பெயரிடுவதற்கும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரனை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தலில் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதற்காக கோடிக் கணக்காண பணத்தை செலவிட புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு பாரியளவு பணத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்படி பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 30000 ரூபாவும், கிராம மட்ட இளம் தலைவர்களுக்கு 25000 ரூபாவும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.