BREAKING NEWS

May 8, 2013

புதிய மின் கட்டண மாற்றம் குறித்து இன்று இறுதி கலந்து ரையாடல்

மின் கட்டண உயர்வு தொடர்பில் புதிய திருத்தத்தை உள்ளடக்குவது குறித்த இறுதி கலந்துரையாடல் இன்று (08) இடம்பெறும் என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இன்று மாலை குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார். 

மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததற்கு அமைய புதிய மாற்றத்துடனான மின் கட்டண அறவீடு இம்மாதம் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் 60 மின் அலகுகளைப் பயன்படுத்தும் பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றும், 90 அலகுகள் முதல் 95 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணக் கட்டணத்தில் சீராக்கல் வழங்கவும், 180 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &