இனந்தெரியாத ஆயுத குழுவொன்று 7 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்துள்ளது. ஜா-எல, ஏக்கல சந்தியிலேயே சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பளம் வழங்குவதற்காக வங்கியிலிருந்து பணத்தை நிறுவனத்திற்கு கொண்டு சென்றுக்கொண்டிருந்தபோதே வானில் வந்த இனந்தெரியாத ஆயுதம் தாங்கிய குழுவினர் அந்த பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.