நோய்க்கான மாத்திரையை உட்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அஞ்சலியின் உயிருக்கே ஆபத்து என அவரது சித்தி பாரதிதேவி அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஞ்சலிக்கு உள்ள நோய் என்ன என்று சொன்னால் அஞ்சலியின் திரையுலக வாழ்வே இல்லாமல் போய்விடும். அவளை வளர்த்து விட்டது நான்தான். நானே அவளது அழிவிற்கும் காரணமாகக் கூடாது என்பதற்காகவே அதனை சொல்லாது இருக்கிறேன் என அஞ்சலியின் சித்தி தெரிவித்துள்ளார்.
அவளிடம் பணம் இல்லாத காலத்தில் யாரும் அவளை தேடவில்லை. ஆனால் இப்போது புதுப் புது உறவினர்கள் தேடி வருகின்றனர்.
அவள் சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு கார் போன்றவற்றை அவளிடமே கொடுத்து விடுகிறேன். பலமுறை பலருடன் ஓடியவள்தான் அவள். அவளது நோய்க்கு உரிய நேரத்தில் மாத்திரை குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்காவிட்டால் அவளது உயிருக்கே ஆபத்து என்பதுதான் என்னுடைய வருத்தம் என அஞ்சலியின் சித்தி பாரதிதேவி தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள அஞ்சலி
சித்தியின் கொடுமை – நடிகை அஞ்சலி பரபரப்புத் தகவல்
கற்றது தமிழில் அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக உள்ள அஞ்சலி பரபரப்புத் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சித்தியின் கொடுமை தாங்கமுடியாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாகவும் ஹைதரபாத் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிப்பின் மூலம் உழைத்த கோடிக்கணக்கான பணத்தை சித்தியும் இயக்குனர் களஞ்சியமும் இணைந்து பறித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்தால் தனது உயிருக்கு ஆபத்து எனவும், தனது உடலில் சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு தனது சித்தியும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் இயக்குனர் கஞ்சியமும் தான் பொறுப்பு எனவும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

