பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களது நலன்கருதி கல்வி விருத்திக்காகவும் பெளதீக வளங்களைப் பெற்றுத்தருவதட்காகவும் தமது செல்வத்தை செலவழித்த தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளை கெளரவிக்குமுகமாக பரகஹதெனிய தேசியப் பாடசாலையின் மேம்பாட்டுச் சங்கத்தினர் நன்றி பாராட்டும் வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இவ்வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5-4-2013 பிற்பகல் 3.00 மணியளவில் பரகஹதெனிய தேசியப் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நீர்ப்பாசன வடிகாலமைப்பு கண்காணிப்பு அமைச்சர் கெளரவ நிரஞ்சன் விக்ரமசிங்க்ஹ அவர்கள் வருகைதர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் பாடசாலை மாணவர்களது பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினரான பாடசாலை மேம்பாட்டுச் சங்கத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.