BREAKING NEWS

Apr 4, 2013

அனுராதபுர இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற BBS முயற்சி

அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்காது போனால், அதனை பலவந்தமாக அகற்றப் போவதாக பொதுபல சேனா அமைப்பு பிரசாரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் புலனாய்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அனுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


பொதுபல சேனா அமைப்பு அனுராதபுரத்திற்கு வந்து, குறித்த இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை அகற்றினால், நகரத்தில் உள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் பதற்றமான நிலைமை ஏற்படும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த முஸ்லிம் அறநெறி பாடசாலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &