BREAKING NEWS

Apr 4, 2013

எம்.எச்.எம் அஷ்ரப்பை BBS அவமதித்து உள்ளது – ரவுப் ஹக்கீம்


பொதுபலசேனா அமைப்பு முஸ்லீம்களின் தலைவர் என்று அனைத்து முஸ்லீம்களும் அன்புடன் மதிக்கும்எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களை அவமதிக்கும் விதத்திலான கருத்துகளை தெரிவித்து வருவதாக, முஸ்லீம் காங்கிரஸ் தளவைரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இரண்டு ஆயுதக் கப்பல்களை இலங்கைக்கு கொண்டுவந்ததாக பொதுபலசேனா அமைப்பு செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் சுமத்திய குற்றச் சாட்டு தொடர்பிலேயே அமைச்சர் ரவுப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர் சூழலின் போது எம்.எச்.எம் அஷ்ரப் இலங்கைக்கு கொண்டுவந்த இரண்டு காப்பல் ஆயுதங்களும் தற்போது எங்கே உள்ளது என, பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்
உரையாற்றிய கலகோட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் குற்றச் சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்த ரவுப் ஹக்கீம், நாட்டுக்கு நன்மை செய்த சேவையாற்றிய உன்னத அரசியல் தலைவர் ஒருவர் மீது ஆதாராமில்லாதா பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்துவதை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &