BREAKING NEWS

Apr 13, 2013

வாகன நெறிசலால் 35 மில்லியன் இழப்பு


கொழும்பில் நிலவும் வாகன நெறிசல் காரணமாக வருடாந்தம் 35 மில்லியன்இழப்பு ஏற்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக போட்டித் தன்மையுடைய உலகத்தில் அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என ஆய்வை நடத்திய மொரட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் பேராசிரியர் அமல் குமாரகே குறிப்பிட்டார்.
தொழிலுக்காக செல்கின்ற பெரும்பாலானவர்கள் வாகன நெறிசல் காரணமாக நாளாந்தம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கை அடுத்த 20 வருடங்களில் 8 மில்லியனாக அதிகரிக்கலாம் எனவும் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &