ஈரான் அணு உலை அருகே பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கம் ஈரான், துபாய்,கத்தார்,பஹ்ரைன், அபுதாபி மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
.
ஈரானைத் தொடர்ந்து சுமார் 13 நிமிட இடைவெளியில் ஐக்கிய அரபு நாடுகளில் மாலை சுமார் 04:00 மணிக்கு உணரப் பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
.
நிலநடுக்கம் ஏற்பட்ட சமயம் கட்டிடங்கள், பூங்காக்கள் அதிர்ந்ததால் மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 1000 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது




