BREAKING NEWS

Mar 21, 2013

அசாத் சாலியின் அலுவலகம் ,வீடு போலிசாரால் முற்றுகை

அசாத் சாலி அவர்களின் கரியாலயம் வீடு, என்பனவற்றுக்கு போலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு சென்றதாக எமக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நாம் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.

அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து அவரின் சகோதரர் ரியாஸ் சாலி அவர்களை இணையம் சற்றுமுன் தொடர்பு கொண்டது.

இதன்போது எமக்கு இது தொடர்பாக விளக்கமளித்த அவர்..,

இன்று பகல் சுமார் இரண்டு மணியளவில் அசாத் சாலி அவர்களின் வீட்டுக்கு வந்த போலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவருக்கு ஒரு முறைப்பாடு இருப்பதாகவும், அவரை விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் கூறினர்.

குறிப்பிட்ட நேரத்தில் அசாத் சாலி அவர்கள் வீட்டில் இல்லாதிருந்த்ததல் அவரின் காரியாலயத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கும் அவர் இல்லாததை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நாளை காலை விசாரணைக்கு சமூகம் அளிக்குமாறு அறிவுறித்தல் வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் இது ஒரு தனிப்பட்ட நபர் (ஒரு முஸ்லிம் நபர் ) ஒருவர் வழங்கிய புகாருக்கே விசாரணைக்கு வந்ததாக அவரின் சகோதரர் ரியாஸ் சாலி அவர்கள் மேலும் தெரிவித்தார். Thanks MN

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &