BREAKING NEWS

Mar 23, 2013

இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை: முஸ்லீம் லீக்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லீம் லீக் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் தலைவர் ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இப்போட்டிகளில் பங்கு பெற்றுள்ள இலங்கையை சார்ந்த வீரர்களை அனு மதிக்க கூடாது. குறிப்பாக சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கு பெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போட்டியில் பங்குபெறும் அனைத்து அணி உரிமையாளர்களும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மூன்று இலங்கை வீரர்களை அணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &