BREAKING NEWS

Feb 17, 2013

வாரியபொல வில் முஸ்லிம் களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ரத்து

முஸ்லிம்களுக்கு எதிராக வாரியபொலவில் இன்று நடைபெற விருந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டது.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாரிய பொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பீ.நாவின்னவின் கவனத் திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட் டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரான அப்துல் சத்தார் உடனடியாக வாரியபொல பிரதேசத்துக்கு சென்று குறித்த ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஹலால் தொடர்பாக வாரியப்பொல நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நேற்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாரியப்பொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பீ.நாவின்னவுக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு அறிவித்தார்.

இதனையடுத்து வாரியப்பொல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள், வாரியப்பொல பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, சிங்கள வர்த்தக சங்க உறுப்பினர்கள், வாரியப்பொல பிரதேச சபையின் தவிசாளர் ஆனந்த, வாரியப்பொல நகரிலுள்ள பிரதான விஹாரைகளின் விஹாராதிபதிகள் உள்ளிட்ட பலரை அழைத்து சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன விசேட கூட்டமொன்றை கடந்த சனிக்கிழமை நடத் தினார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் நாவின்ன,

ஹலால் சம்பந்தமான பிரச்சினை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தோடு முடிந்து விட்டது. ஹலால் சான்றிதழ் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் முஸ்லிம்களுடைய தூய உணவுப் பொருட்களாக அடையாளப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படு கின்றது.

இதற்கு எதிராக செயற்படுவோர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடந்தையாகவுள்ள நான்கு வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான மோசமான காரியங்களைச் செய்யத் தூண்டி முழு சிங்கள மக்களுக்கும் அவப்பேற்றை ஏற்படுத்திவிட வேண்டாம். இந்த வாரியப்பொல நகரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்குமானால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்றார்.

அத்துடன், குருநாகல் மாவட்டப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சகல அதிகாரி களுக்கும் முஸ்லிம்களின் பாதுகாப்பு நலன்குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் பணிப்புரை விடுத்தார். இதனை அடுத்து இந்தப் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தின் தடை உத்தரவு கோரி விண்ணப்பிக் கப்பட்டது.

இந்தச் சம்பவம்தொடர்பாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப் பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தாரும் சிரேஷ்ட அமைச்சருக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த ஆர்ப்பாட்டம்

கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளி இடங்களிலிருந்து இரண்டு வாகனங்களில் வந்த குழுவினர் நாரமல்ல பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள முயற்சித்தனர். எனினும் பாதுகாப்பு படையினரும் குறித்த பிரதேச மக்களும் பெளத்த மதகுருமாரும் அனுமதிக்கவில்லை.

இதனால் துண்டு பிரசுரமொன்றை விநியோகித்துவிட்டு ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்தவர்களுக்கு ஏசிவிட்டு சென்றுள்ளனர். சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரம நாயக்க தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஹலால் தொடர்பிலான குழு நாளை செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறும். இந்தக் கூட்டத்தில் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஹலால் தொடர்பில் விரிவாக கலந்துரையாடிய பின்னர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்காக அறிக்கையொன்று தயாரிக்கப்பட வுள்ளது.

இதேவேளை, ஹலால் தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இந்த விசேட கூட்டமும் செவ்வாய்க்கிழமையே நடைபெறவிருக்கின்றது.






Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &