BREAKING NEWS

Jan 14, 2013

ஒருபால் திருமணத்தை எதிர்த்து பிரான்ஸில் பெரும் ஊர்வலம்

ஒருபால் உறவுக்காரர்கள் இடையேயான திருமணத்தை எதிர்த்து பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரு பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஒரு பால் உறவையும், அவர்கள் குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வதையும் பிரான்ஸில் ஜூன் மாதமளவில் சட்டபூர்வமானதாக்க பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒலந்த் அவர்கள் விரும்புகிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காக நூற்றுக்கணக்கான பேருந்துகளிலும், சிறப்பு ரயில்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தலைநகர் பாரிஸுக்கு வந்து சேர்ந்தார்கள்.
மூன்று பிறதான நிரல்களாக இவர்கள் ஈபிள் கோபுரத்தை நோக்கி இவர்கள் அணிவகுத்துச் சென்றார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கத்தோலிக்க திருச்சபையும், வலதுசாரி அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &