ரஷ்ய நாட்டு விலை மாதுக்களை நாட்டிற்குள் ஒரு பக்கமாக அழைத்துக் கொண்டு பிரதம நீதியரசரை மறுபுறமாக வெளியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டிற்கான ஐக்கிய தேசியக் கட்சி அபிவிருத்திக் கூட்டம் இன்று (07) சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதன்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் பேசிய எதிர்க் கட்சித் தலைவர்,
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நீதிமன்றத்திற்கு போனமை அவரது உரிமை.
எனினும் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் ராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை உடைத்தெறிய முடியாது.
ராஜபக்ஷ ஆட்சியை எதிர்ப்பதன் மூலம் நடுத்தெருவிற்கு வருவதற்கான சாத்தியங்களே அதிகம்.
தனியார் ஊடகங்கள் அரசிற்கு சார்பாக நடக்கின்றன. என்னை தாக்கியே எப்போதும் செயற்படுகின்றன.
எனவே இனிவரும் காலங்களில் ஊடகங்கள் குறித்தும் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கப் போவதில்லை.
நான் இப்போது ஒரு உதைப் பந்து போல் எல்லாப் பக்கத்தாலும் அடி வாங்குகிறேன் என ரணில் மேலும் தெரிவித்தார்.
Jan 7, 2013
நான் இப்போது எல்லோருக்கும் உதைப் பந்து போல! ரணில் கவலை
Posted by AliffAlerts on 16:44 in செய்தி உள்ளூர் | Comments : 0
