நேற்று மாலை கல்கமுவ பிரதேசத்தில் ஒருவரது காற்சட்டைப் பையிலிருந்த கையடக்கத் தொலைபேசி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். தனது காற்சட்டைப் பையிலிருந்த கையடக்கத் தொலைபேசி திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்ததில் காயமடைந்துள்ளார்.வெடிச் சத்தத்தையூம்விட அதிக சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அவரது காற்சட்டை எரிந்துள்ளதுடன் கை மற்றும் காலில் எரிகாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இதே போன்றதொரு வெடிப்பு சம்பவம் கொழும்பிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: சன்ஜீவ ரத்நாயக்கமில்ஹான்.
