BREAKING NEWS

Sep 23, 2012

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' தயாரிப்பாளரை கொல்வதற்கு 100,000 டொலர் சன்மானம்

இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தின் தயாரிப்பாளரை கொல்வதற்கு பாகிஸ்தானிய புகையிரதத்துறை அமைச்சரான கோலம் அஹ்மட் பிலோரே 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக அறிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் காரணமாக முஸ்லிம்கள் உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் பலர் கொல்லப்பட்டுமுள்ளனர்.

இந்நிலையிலேயே பாகிஸ்தானிய அமைச்சர் சர்ச்சைக்குரிய இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்காரணமாக அமெரிக்காவானது பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &