Aug 31, 2012
குர்ஆன் வசனங்களை ஓதிய சஜித் பிரேமதாச
Posted by AliffAlerts on 15:42 in NL | Comments : 0
சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அரபு மொழியில் குர்ஆன் வசனங்களை ஓதிய சஜித் பிரேமதாச.அண்மையில் சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் சஜித் பிரேமதாசா உரையாற்றும்போது
எனக்கு ஒரு பொழுது போக்கு உள்ளது அதுதான் யானைகளை படம் பிடிப்பது ஒருநாள் பொத்துவிலில் யானை கூட்டம் ஒன்றை படம் பிடிக்க சென்ற போது யானை கூடம் என்னை துரதிஷ்டவசமாக விரட்ட ஆரம்பித்தது. அந்த நேரம் நான் குர்ஆன் வசனம் ஒன்றை ஓதி தப்பித்துக் கொண்டேன்.
ஆம், அதுதான் "அலம்தர கைப பஅல றப்புக்க பிகஸ் ஹாபில் பீல்" என்ற அல் குர்ஆன் வசனம் என்று கூறி அதை அரபு மொழியில் ஓதினார் இந்த சூரா, யானை கூட்டம் பற்றி குறிப்பிடும் ஒரு அத்தியாயம் ஆகும் என்பது இங்கு குறிப்பிடதக்கது
இதனை அவர் ஓதியதும் மக்கள் பெரும் கரகோசத்தை எழுப்பினர்.
மேலும், அவர் நான் முஸ்லிம்களை மதிப்பவன் எனது தந்தையும் அவ்வாறுதான் எனக்கு கற்றுத்தந்தார் நான் சின்ன பிரேமதாச ஆகையால் அந்த பெரிய பிரேமாதசவின் வழியை நான் கடை பிடிக்கிறேன். எனது தந்தை முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளையும் எனக்கு கற்று தந்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அவர் நான் ‘மஸ்ஜித்துகளுக்கு புது பொலிவு’ எனும் வேலை திட்டத்தின் மூலம் பள்ளிவாசலுக்கு உதவி வருகிறேன் என்றும் தெரிவித்தார்.