BREAKING NEWS

Oct 6, 2015

பறகஹதெனிய பிரதேசத்தில் மீண்டும் எழுச்சி பெறும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் தஃவா நடவடிக்கைகள்......

பறகஹதெனிய பிரதேசத்தில் மீண்டும் எழுச்சி பெறும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் தஃவா நடவடிக்கைகள்......

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெறும் கிருபையினால் மீண்டும் எமது சொந்த மண்ணில் தஃவா நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

மதீனா பல்கலையில் கலாநிதி பட்டம் பெற்ற எமது மண்ணின் மைந்தன் டாக்டர் அம்ஜத் ராஸிக் மதனி அவர்கள் பிரதி ஞாயிரு தோரும் இஷா தொழுகைத் தொடர்ந்து இஸ்லாமிய கொள்கை விளக்கம் (அகீதா) மற்றும் ஹதீஸ் பாடநெறியை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியில் நடாத்தி வருகின்றார். அல்ஹம்துலில்லாஹ்.

பொதுவாக எல்லா மக்களுக்குமாக நடைபெறும் இந்த பாடநெறியுடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் இளைஞர்களுக்கு விஷேட வகுப்பு ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளதாக அஷ்ஷைக் அம்ஜத் எம்மிடம் தெரிவித்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பணிகளை பொருந்திக் கொண்டு பூரணமான கூலியை இந்நிகழ்வுகளில் அர்பனிப்புடன் ஈடுபடும் எல்லோருக்கும் வழங்க வேண்டும் என துஆ செய்து கொள்கின்றோம்.

Sep 16, 2015

மக்கா கிறேன் விபத்தில் பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு சவூதி நட்டஈடு



மக்கா கிரேன் விபத்தில் பலியானவர்களுக்கு 1 #மில்லியன் சவுதி ரியால்.(மூன்றுகோடி  ஐம்பதுஇலட்சம்  இலங்கைரூபாய்)

 அதிகமாக பாரதூரமாக காயப்பட்டவர்களுக்கு  1 #மில்லியன் சவுதி ரியால்.(மூன்றுகோடி  ஐம்பதுஇலட்சம்  இலங்கைரூபாய்)

 ஓரளவு  காயமுற்றவர்களுக்கு அரை #மில்லியன் சவுதி ரியால்.
(ஒருகோடி  எழுபத்திஐந்துலட்சம் இலங்கைரூபாய்)

*காயமுற்று இந்த வருடம் #ஹஜ் செய்ய முடியாதவர்களுக்கு அடுத்த வருடம் இலவசமாக #ஹஜ் செய்யும் வாய்ப்பு.

*இறந்தவர்களின் குடும்பத்திலிருந்து இருவருக்கு 2016 வருடம் இலவசமாக #ஹஜ் செய்யும் வாய்ப்பை மன்னர் சல்மான் ஏற்படுத்தி உள்ளார் அல்ஹம்துல்லில்லாஹ்.''
பின்லாடன்  கொம்பனிக்கும்  ஆப்பு .
மேலதிக  செய்திக்கு >>
http://www.arabnews.com/featured/news/806641
http://www.arabnews.com/featured/news/807031

Sep 11, 2015

மக்காவில் கிறேன் விபத்து 107 பேர் மரணம்



சற்று முன்னர் மக்காவில் கட்டட நிர்மானப்பனியில் செயற்படும் கிறேன் ஒன்று வீழ்ந்ததில்  ஹஜ்ஜாஜிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

பலத்த மழை,  காற்றின் காரணமாகவே மக்காஹ்வில்  இந்த கிறேன் விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது அத்துடன் மழை இப்பொழுது ஓய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை மரணித்தவர்களது எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது, 238க்கும் மேற்பட்டோர் காயம் என தெரிவிக்கப்படுகின்றது 





"ஒலுவில் பிரதேசம் கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது" சகல முஸ்லிம் அரசியல் வாதிகளினதும் கவனத்திற்கு...


By AsSheikh Inamullah Masihudeen 

ஒலுவில் பிரதேசம் கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில்  இன்று வெள்ளிக்கிழமை (11) ஒலுவிலில் மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன.

ஒலுவிலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாக சபைகள், சமூக சேவை அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போன்றன ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ள இவ்வார்ப்பாட்டப் பேரணி, ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 1.15 மணியளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஒலுவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலிலிருந்து ஆரம்பமாகி கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வரை இவ்வார்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரவிக்கின்றனர்.

ஒலுவில் துறைமுக நிர்மாணிப்புக் காரணமாக பெரும் சேதங்களுக்குள்ளாகி அழிவடைந்துவரும் ஒலுவில் கிராமத்தினதும் அங்குள்ள மக்களினதும் அவலங்களையும் அழிவுகளையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இவ் ஆர்ப்பாட்டப் பேரணியும் விழிப்புணர்வு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தைப் பாதுகாப்பது உட்பட சொத்துக்கள் மற்றும் வளங்களின் அழிவை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் சம்மந்தப்பட்டவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தல், எதிர்காலத்தில் கடலரிப்பு ஏற்படாமலிருப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளல், பாதிக்கப்பட்டள்ள மக்களின் சொத்து இழப்பிற்கு நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்க சம்மந்தப்பட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களை உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sep 9, 2015

NEW STATE(19) & DEPUTY(22) MINISTERS OF SRI LANKA

STATE MINISTERS
1. Dilip Wedaarachi: Fisheries
2. Niroshan P: National Policies & Economic Affairs
3. Ruwan Wijewaradana: Defence
4. Mohanlal Greru: University Education
5. V Radakrishnan: Education
6. Palitha Ranga Bandara: Vocational Training
7. Sudharshani Fernandopulle: Water Supply
8. Sujeewa Senasingha: Foreign Investment
9. Champika Premadasa: Industries
10. Priyankara Jayaratna: Law& Order
11. TB Ekanayake : Land
12. AHM Fowzie: National Integration
13. Lakshan Yapa: Finance
14. Ravi Samaraweera: Labour
15. Wasantha Senanayake: Irrigation 
16. Wasantha Aluvihare: Agriculture
17. Wijekala Maheshwaran: Child Affairs
18. Hizbullah: Rehabilitation
19. Dilan Perera: Highways

DEPUTY MINISTERS
1. Sumeda G Jayasena: Wildlife
2. Susantha Punchi Nilame: Public Administration
3. Faisal Cassim: Health
4. Ameer Ali: Rural Economy
5. Lasantha Alagiyawanna: Mega Policy
6. Indika Bandaranayake: Housing
7. Dulip Wijesekara: Postal &Muslim Affairs
8. Lakshman Wasantha Perera: Plantation
9. Nishantha Muthuhettigama: Ports
10. Dunesh Gankanda: Disaster Management
11. Anoma Gamage: Petroleum
12. Harsha D Silva: Foreign Affairs
13. Ajith P Perera: Power & Energy
14. Ashoka Abeysingha: Transport
15. Arundika Fernando: Tourism Development & Christianity
16. Eran Wickramarathna: State Entrepreneur
17. Ranjan Ramanayaka: Social Services
18. HM Haris: Sports
19. Tharanath Basnayake: Telecommunications
20. Karu Paranavithana: Provincial Council &Local Government
21. Nimal Lansa: Home Affairs
22. Siripala Gamlath: Foreign Employment 

G.A.Q. விற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத்  வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும்.

இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk/edce என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாக சமூகமளித்து விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, 2014ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அன்றாட வாழ்க்கையின் திட்டமிடலும் ஒழுங்கான முகாமைத்துவமும்

By: AsSheikh Inamullah Masihudeen

காலையில் எழுந்தவுடன் திட்டமிடல் : 

சுபஹு தொழுதுவிட்டு, அல்-குரானை ஒதுவது, திக்ரு அவ்ராதுகளை ஓதுவது என ஆன்மீக கடமைகளை செய்து அன்றைய தினத்தை அருள் நிறைந்ததாக ஆரம்பம் செய்தல் வேண்டும்.

அன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய கடமைகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள், சந்திக்க வேண்டியவர்கள், சாதிக்க வேண்டியவைகள் என்பவற்றை கால நேர வரையறைகளோடு திட்டமிட்டுக் கொள்ளுதல் அவசியமாகும். 

படுக்கைக்கு செல்லுமுன் சுய விசாரணை :

அதே போன்று அன்றைய நாள் நிறைவில் படுக்கைக்குச் செல்லு முன்னும் ஒருமுறை நாம் திருப்திகரமாக, ஆக்கபூர்வமாக அந்த தினத்தைக் கழித்தோமா, இல்லாவிட்டால், ஏன், எப்படி என்று சிறியதொரு மீட்டலை செய்து கொண்டு, நாளைய பொழுதை எவ்வாறு கழிப்பது என்ற திட்டமிடலை செய்து கொண்டு இரை தியானங்களை செய்து கொண்டு நித்திரைக்கு செல்லுதல் வேண்டும்.

திட்டமிடலும் நேர முகாமைத்துவமும்:

திட்டமிடலும் நேர முகாமைத்துவமும் எமது வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சங்களாகும், அப்பொழுதுதான் முதன்மைப் படுத்த வேண்டிய அம்சங்கள், தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள், எமது கடமைகள், பொறுப்புக்களில் இருந்து எம்மை பராக்காக்குகின்ற அம்சங்கள் குறித்து முடிவெடுக்கின்ற திறன் எம்மிடம் வளரும்.

கடமைகளை காலம் தாழ்த்ததிருத்தல் :

கல்வியாயினும், தொழில் முயற்சிகளாயினும், ஏனைய சமூகம்,தேசம் சார்ந்த சேவைகளாயினும் அவற்றை இன்றே செய்யவும், நன்றே செய்யவும் எம்மை நாம் வழக்கப் படுத்திக் கொள்ளும் பொழுது எமது ஒவ்வொரு பொழுதும் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமையும்.

காலம் கடந்த கைசேதம் வேண்டாம்:

மனம் போன போக்கில், அல்லது உலகம் போகிற போக்கில் குறிப்பாக நண்பர்கள் போகிற போக்கில் என வாழ்ந்து, எமது ஆன்மீக வாழ்வு, அறிவு தேடல்கள், வாழ்வாதார முயற்சிகள், குடும்ப சமூக கடமைகள், நட்புறவுகள், சமூக ஊடக பாவனைகள், எல்லாவற்றையும் மிகச் சரியான திட்டமிடலில் மேற்கொள்ளத் தவறின் காலம் கடந்து நாம் கைசேதப் படுவது நிச்சயம்.

குறிப்பு : சிறுவர்களை குழந்தைகளை சிறுவயதிலிருந்தே ஒரு வாழ்வியல் ஒழுங்கில் பராமரித்தல் வேண்டும், அறிவுரைகளை உபதேசங்களை குறைத்து அவர்களுடன்  அவர்களோடு துணையாக நின்று அந்த ஒழுங்கில் அவர்களை வழக்கப்படுத்தி விடுதல் வேண்டும்.

அருளும் பொருளும் ஆன்மீகமும் ஆரோக்கியமும் என எல்லா வளமும் நிறைவாகப் பெற்று வாழ்க வளமுடன்.!

Sep 8, 2015

சிரிய அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவுதி குடியமர அனுமதி

சிரியா அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவுதி அரேபியா குடியமர்வதற்கான அனுமதியையும் 1 இலட்ச்சம் மாணவர்களுக்கு சவுதி பல்கலைக்கழங்கள் மற்றும் அரச பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. 

பெரும்பாலும் யுத, கிரிஸ்தவ ஊடங்களில் வராத இந்த செய்தி எமது முஸ்லிம்களுக்கு  புதியதாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த செய்திகளை கண்டாலும் எதுக்கு எடுத்தாலும் சவுதியை திட்டித் தீர்க்கும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் கஷ்டங்கள் இருக்கலாம். 

ஐரோப்பா சிரிய அகதிகளை இரு கரம் ஏந்தி வரவேற்கின்றது என்று மார்பு தட்டிக் கொண்டு சவுதியை திட்டியவர்களுக்கு இப்போது அந்த நாடுகளில் உள்ள சிரியகளில் ஈமானுக்கு எற்பட்டுள்ள சோதனையை புரிந்து கொள்ளலாம். 

இன்னுமொரு விஷயம் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றவர்களில் அதிகமானவர்களுக்கு தமது ஈமானை பாதுகாப்பதை விட ஐரோப்பிய குடியுரிமை பெரிதாக இருக்கலாம். அல்லாஹ் போதுமானவன்.

(PDS Dawah)





உழ்ஹிய்யா தொடர்பில் ACJU முக்கிய அறிவித்தல்.



உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அது மிக முக்கியமான ஒரு சுன்னத்தாகும். அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. உழ்ஹிய்யாவின் மூலம் ஏழைகள், பணக்காரர்கள் அனைவரும் சந்தோசமாக பெருநாளை கொண்டாடும் நிலை ஏற்படுகிறது. அத்துடன் இதன் மூலம் உள்நாட்டில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்கும் அதிக பயன் கிடைக்கின்றது.

இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது. அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது. ஜீவ காருண்யத்தை ஏவுகிறது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமம் கொடுத்த மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

எனவே, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் ஒருவர் உழ்ஹிய்யாவுக்கான பிராணிகள் மீது கருணையோடு நடந்துகொள்ளவேண்டும். இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுதுதான் இவ்வணக்கத்திற்கு கூறப்பட்டுள்ள சிறப்புகளை அடைந்துக் கொள்ள முடியும். அல்லாஹு தஆலா திருமறையில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வை போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது  பின்வரும் ஷரீஆவின் வழிகாட்டல்களை பின்பற்றுதல் வேண்டும்.

  1. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையும் ஏற்படாது பார்த்துக்கொள்ளவேண்டும்.
  2. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனிகொடுக்கப்பட வேண்டும்.
  3. உழ்ஹிய்யாவுக்கான பிராணியின்முன்னிலையில்ஏனையபிராணிகளைஅறுத்தல் ஆகாது.
  4. அறுவைக்காக பயன்படுத்தும் கத்தியை நன்றாக தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
  5. குர்பானி நிறைவேற்றப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
  6. அறுவைக்காக பயன்படுத்திய இடத்திலும் கழிவுப்பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளை தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
  7. நம் நாட்டில் அறுவைக்கென்று ஒரு சட்டம் உள்ளது. அச்சட்டத்தை இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற்கொள்ளல் வேண்டும். (மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களைஎடுத்துச்செல்வதற்கானஅனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்ளல்வேண்டும்)
  8. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
  9. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும்வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படப்படும்வகையிலோநடந்துகொள்ளக்கூடாது.
  10. போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்துக் கொள்ள ஏனைய நாட்களை இதற்காகபயன்படுத்த வேண்டும்.
  11. உழ்ஹிய்யாநிறை வேற்றப்படும்படங்களை அல்லது வீடியோக்களைச மூகவலைத் தளங்களில் பகிர்ந்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  12. உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச பள்ளிவாசல்கள் அல்லது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது சிறப்புடையது.

பள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு நில்லாது, அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பிற மத சகோதரர்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும்முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாககேட்டுக்கொள்கிறது.

 

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

புதிய மோட்டார் வாகன சட்டம் 07.09.2015 முதல் அமலுக்கு வருகிறது





சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
(Vehicle will be taken to court..)

ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும் (vehicle siez)
வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)
அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
3 முறைக்குமேள் அபராதமும் விதித்தாள் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமக ரத்துசெய்யபடும் (Three time Memo & License seiz in both two and four wheelers.
 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &