- ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசனின் மே தின ஊர்வலத்தில் அபாயாவை இழிவுபடுத்தும் விதமாக அபாயா அணிந்து மிருகத்தின் முக வடிவிலான முகம் மூடி அணிந்து பேரணிகளாக சென்றுள்ளார்.
இதே போன்று அபாயா அணிந்து நிகாபுடன் மிருக முக மூடி அணிந்து சென்ற வருடம் பொது பல சேனாவினால் அபாயாவையும் நிகாபையும் இழிவுபடுத்தும் விதமாக பாரிய பேரணி ஒன்று சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டில் முஸ்லிம் தமிழ் மக்கள் ஒற்றுமையோடு வாழும் இந்த நேரத்தில் இது போன்ற விடயங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டிய செயலாகும்.
-ஷபீக் ஹுஸைன்-
