
- AsSheikh Inamullah Masihudeen
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் முப்பத்தி ஐந்தாவது வருடாந்த ஸ்தாபித நிகழ்வு நேற்று கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் முப்பத்தி ஐந்தாவது வருடாந்த ஸ்தாபித நிகழ்வு நேற்று கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பாக 1980 ஆண்டு மாவனல்லையில் ஸ்தாபிக்கப்பட்ட "ஜம்மியத்துல் தலபா" அமைப்பு இன்று நாட்டின் பல பாகங்களிலும் இளம் இஸ்லாமிய ஆளுமைகளின் உருவாக்கத்தில் போற்றத்தக்க பங்களிப்பினை செய்து வருகின்றது.
தேசிய அளவில் கட்டமைப்பையும், அங்கத்துவங்களையும், செயற்பாடுகளையும் கொண்ட இஸ்லாமிய அமைப்புக்கள் மாத்திரமே தேசிய ஷூரா சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளன, அந்த வகையில் ஜம்மியத்துல் தலபாவும் தேசிய ஷூரா சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களிலும் தேசமும் சமூகமும் எதிர்பார்க்கின்ற பங்களிப்புக்களை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பதோடு, சமூகத்தில் வேற்றுமைகள் களைந்து ஒருமைப்பாட்டை வளர்க்கவும், தேசத்தில் கரைந்து விடாமல் கலந்து வாழும் சமாதான சகவாழ்வை கட்டி எழுப்பவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வளங்களையும் வழங்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
ஜம்மியத்துல் தலபா அமைப்பிடம் இருந்து எனது வாழ்நாளில் முதன் முதலாக கிடைக்கப் பெற்ற அழைப்பினை ஏற்று நேற்றைய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாக ஹபுகஸ்தலாவையில் இருந்து கொழும்பு வந்து சேர்ந்த பொழுதும், தவிர்க்க முடியாத மற்றுமொரு காரணத்தினால் அதில் பங்கு கொள்ள முடியாமல் போனமை கவலை தருகின்றது.