BREAKING NEWS

May 4, 2015

புதிய முறையில் விகாரைக்கு தர்மம் கொடுக்க முயற்சித்த பெண் கைது.

DSC08919-Copy

நிதி வழக்கு ஒன்றின் மூலம் தனக்கு கிடைக்க உள்ள மிகப்பெரும் தொகையை பணத்தை பெளத்த விகாரைக்கு தானம் கொடுப்பதாக கூறி மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
பேராதனையை சேர்ந்த குறிப்பிட்ட பெண் விகாரைகளுக்கு சென்று, தனக்கு நிதி வழக்கு ஒன்றின் மூலம் பெரும் தொகை பணம் வரவுள்ளது எனவும், அதற்கு வக்கீல் கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுகிறது எனவும் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பகட்டான உடையுடன் கூலிக்கு எடுத்த வாகனத்தில் சென்று தனக்கு கிடைக்கும் பெரும் பணத்தை விகாரைக்கு வழங்குவதாக கூறி வக்கீல் கட்டணத்திற்கு பணம் சேர்த்த போது சந்தேகத்தில் பொலிசாரிடம் ஒருவர் தெரிவிக்கவே இவர் கைது செய்யபட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &