BREAKING NEWS

Apr 30, 2015

Petrol, Wi-fi தன்சல் - Vesak 2015

Untitledவெசக் தினத்தன்று இலவச WiFi வசதிகள் கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படும் என ICTA தெரிவிக்கின்றது. இவ்வாறு WiFi தன்சல் வழங்கப்படுவது இலங்கை வரலாற்றிலேயே முதற் தடவை ஆகும்.

கொழும்பில் லேக் ஹவுஸ் வெசக் பகுதியில் இலவச WiFi தொழிற்படுத்தப்படவுள்ள அதே வேளை மாத்தறையில் பொது நூல் நிலையம் மற்றும் வைத்தியசாலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில்  இலவச WiFi செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக டயலொக் மற்றும் லங்கா பெல் ஆகிய நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கையில் முதல் தடவையாக பெட்ரோல்  தன்சல் ஒன்றும் கொடுக்கப்பட ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.

கொடிகாவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ள இந்த தன்சல் டெஸ்டினி DJ’s நிறுவனத்தின் அனுசரணையில் நடத்தப்படுவதுடன் (மொத்தமாக)  500 லீட்டர் பெட்ரோல் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &