BREAKING NEWS

Apr 30, 2015

ரிசாதுக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம்: ஹுனைஸ் ரணிலுக்கு கடிதம்

வன்னி மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் போட்டியிடுவதற்கு அபேட்சகர் பட்டியலில் இடம் வழங்கக் கூடாதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று மன்னார் பேசாலையில் மன்னார் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டம் வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தலைமையில் இடம் பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீனுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தீர்மானத்தின் பிரதிகள் செயற்குழு உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கட்சி தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஞாயிறு இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதம வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கினை நிறுத்துவது எனவும், வேட்பாளர்கள் தெரிவின்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் உடன் கலந்துரையாட வேண்டுமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

– Rifkhan

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &