
அண்மையில் ஐக்கிய இராச்சியம் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் இலங்கை சோனகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முக்கிய முஸ்லிம் பிரதிநிதிகளுடன் மேற்கொண்டிருந்த பிரத்யேக சந்திப்பின் போது தமது அமைப்பு ஒரு நிராகரிக்கப்பட்ட அமைப்பு என தெரிவித்திருந்த கருத்தால் கொதித்துப் போயிருக்கும் ஞானசார, தமது அமைப்பு உருவானது முதல் இதுவரை என்றாவது முஸ்லிம் சமூகத்துக்கு ஏதாவது அநீதியிழைத்திருந்தால் அதை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும் என குமுறியுள்ளார்.
எமது பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் இர்பான் இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு குறித்த செய்திகள் பெரும்பாலும் அனைத்து முக்கிய உள்ளூர் ஊடகங்களிலும் இடம்பிடித்திருந்த நிலையில் அந்நிகழ்வில் வெளிப்படையாகவே முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய பிரச்சினைகள் குறித்துப் பேசிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என்ற சமூக வேறுபாடின்றி தற்போது கிடைக்கப்பெற்றிருக்கும் நல்ல அரசியல் சூழ்நிலையை நீடிக்கச் செய்து, மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு முயற்சிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அதேபோன்று புலம் பெயர் நாடுகளில் உள்ள மக்கள் அரசின் செயற்பாடுகளை தாம் வாழும் நாடுகளில் எத்தி வைப்பதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதியாக உரையாற்றியிருந்தார்.
எனினும், பிரிவினையையும் இனவாத அடிப்படையையும் போதிக்கும் பயங்கரவாதி ஞானசார, தற்போது சமூக வலைத்தளங்கள் உட்பட பல்வேறு ஊடகத் தளங்கள் ஊடாக ஜனாதிபதியின் ஆணித்தரமான கருத்துக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் வரவேற்பினால் கொதித்துப் போய் தமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் இது வரை தமது அமைப்பினால் முஸ்லிம் சமூகத்துக்கோ, வர்த்தகர்களுக்கோ, அல்லது பள்ளிவாசல்களுக்கோ ஏதாவது (நேரடியாக) அநீதியிழைக்கப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரி ஜனாதிபதி எனும் அடிப்படையில், முப்படைகளையும் இயக்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கொண்டு தமது தரப்பு தவறு செய்திருப்பதாக நிரூபிக்கும் படி கோரியுள்ளார்.
தமது அமைப்பை நிராகரிக்க ஜனாதிபதி அவ்வமைப்பை உருவாக்கவில்லையென்பது அவரது வாதமாக இருக்கிறது. எனினும், இனவாதத்தைத் தோற்கடித்து மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி எனும் அடிப்படையில் யுத்த நிறைவின் பின் இலங்கையில் பேரினவாதத்தைப் போதித்து அதன் ஊடாக பயங்கரவாதத்தை வளர்த்து வந்த பொது பல சேனா அமைப்பு தற்போது கவனிப்பாரற்ற நிலைக்குள்ளாகி ஊடகங்களாலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுகிறது. இவ்வமைப்பினால் நடாத்தப்படும் வாராந்த ஊடக சந்திப்பிற்கு செல்கின்ற போதும் மஹிந்த ஆட்சியில் போன்று ஞானசாரவின் இனவாதக் கருத்துக்களை முன் வைத்து எந்த ஊடகமும் அவற்றை வெளிக்கொண்டுவருவதில்லை. ஆயினும், ஞானசார தொடர்ந்தும் முயற்சி செய்து வருவதும் தற்போது ஜனாதிபதியை நேரடியாக விளித்து அவதூறாகப் பேசுவதன் மூலம் முன்னணிக்கு வர முயல்வதும் கவனிக்கத்தக்க அதேவேளை ஜனாதிபதி மிகத் தெளிவாக பொது பல சேனா அமைப்பு ‘நிராகரிக்கப்பட்ட அமைப்பு’ என தனதுரையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிதானமிழந்திருக்கும் ஞானசார :