BREAKING NEWS

Mar 24, 2015

அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் வினோத சுற்றுலா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால்முஸ்லிம் அல்லாத சகோதரர்களை மையப்படுத்திய வினோத சுற்றுளா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17 ஏப்ரல் 2015 வெள்ளிக் கிழமை மாலை மூன்று மணியளவில் அல் கப்ஜி கடற்கரையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

சுவாரஷ்யமான பல்வேறு போட்டி நிகழ்சிகளும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறந்த பரிசில்களும் காத்திருக்கின்றன.

இஸ்லாத்தைப் பற்றிய ஒரு நல்லபிப்பிராயாத்தை மாற்று மதத்தவர்களிடம் ஏற்படுத்த முயலும் இந்த சுற்றுளாவில் முஸ்லிம் சகோதரர்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டு உங்களுடன் உறவு பாராட்டும் மாற்று மத அன்பர்களையும் ஆர்வத்துடன் பங்கு பற்ற ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். 

கயிரு இலுத்தல் 
சாக்கோட்டம்
முட்டி உடைத்தல்
பலூன் உடைத்தல்
தேசிக்காய் ஓட்டம்
யானைக்கு கண் வைத்தல்
யோகட் ஊட்டுதல்

நிகழ்சிகள் முடிவில் விஷேட இராப் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Riskhan Mustheen (Madani)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &