ஏக இறைவனின் திருப்பெயரால்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 2015 ஏப்ரல் 03 ஆம் திகதி வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 8.20 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் தம்மாம் இஸ்லாமிய நிலைய அழைப்பாளர் மவ்லவி ரிஸ்வான் ஸய்லானி அவர்கள் "நவீன ஊடகங்களும் முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் எமது தஃவா நிலையத்தில் வாராந்தம் இடம் பெரும் இஸ்லாமிய பாடத்திட்டத்திற்கான பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.
இந்நிகழ்சி முடிவில் மேற்படி உரையில் இருந்து கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். ஆண், பெண் இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் அறிவித்தளை உங்கள் பகுதிகளில் முடியுமான அளவு வினியோகித்து தெரியப்படுத்துவதன் மூலமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு சேவை செய்த நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
எனவே தமிழ் பேசும் உள்ளங்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தவராது கலந்து பயன்பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: பெண்களுக்கு விஷேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு எம். றிஸ்கான் முஸ்தீன் 00966555710452