இந்திய கிரிக்கட் அணியில் மிக பிரபல்ய வீரர்களும், ஒன்று விட்ட சகோதரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தமது குடும்ப சகிதம் கடந்த வாரம் 12-02-2015 புனித மக்கா நகரை வந்தடைந்து தமது உம்ரா கடமையை நிறைவேற்றினர். உலக முஸ்லிம்களின் புனித தளமான மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு சென்று தமக்கு தரிசிக்கக் கிடைத்தமை மிகப் பெறும் பாக்கியம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா குஜ்ராத் மாநிலத்தின் பரோடா (Baroda) பிரதேசத்தின் சாதாரன குடும்பத்தில் பிறந்த இவர்களின் தந்தை ஒரு பள்ளிவாசலின் முஅத்தின் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மக்கா மற்றும் மதீனாவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

