
அவிஸ்ஸாவல்ல, சீதவக்க பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நால்வர் நேற்றைய தினம் எதிரணியுடன் இணைந்துகொண்டதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகை 13 ஆக உயர்ந்துள்ளதுடன் ஆளுங்கட்சியின் உறுப்பினர் தொகை 9 ஆக சரிந்துள்ளது.
இதற்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை எட்டாக இருந்ததோடு ஆளுங்கட்சி 14 உறுப்பினர்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.