BREAKING NEWS

Dec 24, 2014

பொதுபல சேனா மஹிந்தவை ஆதரிக்கும் – ஞானசாரர் (VIDEO)

பொதுபல சேனா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்யவென எந்தவொரு நிபந்தனையும் இன்றி பூரண ஆதரவு அளிக்கும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

27,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை சீர்குலையச் செய்ய நூல்பாவை தலைவர் ஒருவருக்கு இடமளிக்க முடியாதென்றும், பொது வேட்பாளரின் கொள்கை ´கூட்டாக்கம்´ என்றும் அதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.

´ஒன்றாக உண்டு குடித்து இருந்துவிட்டு பங்கு குறைந்ததால் இப்போது அவதூறு பேசுகிறார்´ என்றும், .´ராஜபக்ஷகள் இறுதியில் விகாரை அமைத்து வணங்கப்பட வேண்டியவர்கள். ஊழல் மோசடி இருந்தால் முன்னரே சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது´ என்றும் தேரர் தெரிவித்தார்.

ரத்ன தேரர் பௌத்தர்களின் பிரச்சினை குறித்து பேசினால் நன்று எனவும், இந்தளவிற்கு தீவிரமாகியிருக்கத் தேவையில்லை எனவும் ஞானசாரர் சுட்டிக்காட்டினார்.(ரி)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &