தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பரகஹதெனிய பிரதேசத்தின் அநேகமான தாழ் நிலங்கள் அதாவது ஹெட்டியாவெல பண்டாரகல சிங்ஹபுர மற்றும் 9ஆம் கட்டை ஆகிய பிரதேசங்களின் ஒருசில இடங்கள் நீரில் முழ்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு முதல் பெய்துவரும் காற்றுடனான மழையினால் பரகஹதெனியவில் ஒருசில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 9ஆம் கட்டை ஆறும் பெருக்கேடுத்துள்ளதுடன் அருகிலுள்ள வீடுகளும் வெள்ளத்தில் மிதப்பதை காணக்கூடியதாக உள்ளது









