By:AFM Fazeel
சவூதி அராபியாவில் வசிக்கின்ற பறகஹதெனிய தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யாஅரபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து மூன்றாவது தடவையாக நடாத்தும் இஸ்லாமிய மார்க்க அறிவு தொடர்பான மனனப் போட்டிப் பரிசளிப்பு விழா நிகழ்வு பறகஹதெனிய தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை (14-08-2014) நடைபெற்றது.
அந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் என். பீ, எம். அபூபக்கர் சித்தீக் மதனி, ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியயாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், கலாநிதி அம்ஜத் ராசிக், உப அதிபர் அஷ்ஷெய்க் எம் சீ. எம். அன்சார் ரியாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பரிசுகளை வருகைதந்திருந்த அதிதிகள் வழங்கி வைத்ததோடு, கலாநிதி அம்ஜத் ராசிக் மதனி மற்றும் மதினா பல்கலைக்கழக முதுமாணிக் கற்றை நெறி மாணவன் அஷ்ஷெய்க் முஜாஹீத் மதனி ஆகியோர் சேர்ந்து அதிபர் அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் மதனியிடம் தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கல்லூரிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தனர்.




