எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுபலசேனா சார்பாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் எமது கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். குறித்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எமது வேட்பாளர் களமிறங்குவார்’ என ஞானசார தெரிவித்துள்ளார் .
