BREAKING NEWS

Aug 19, 2014

ஏழு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த ஊழியருக்கு உதவிய சவுதி இளைஞர்கள்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஸலீம் என்பவர் அவரது கம்பனியின் மோசமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பித்து வேறு ஒரு இடத்தில் வேலை பார்த்தார். தன்னிடம் உண்மையான தஸ்தாவேஜுகள் இல்லாத காரணத்தினால் கடந்த ஏழு வருடங்களாக தனது தாய் நாட்டுக்கு போக முடியாமல் அவஸ்தைப் பட்டார்.

ஒவ்வொரு நாளும் தனது தாய் தொலைபேசியில் நீ எப்ப வருவாய்என கேட்டுக் கொண்டிருக்க அல்லாஹ்வுக்குத் தான் தெரியும் என அவர் பதிலளிப்பார். இவ்வாரு தனது அன்புத் தாய் மற்றும் மனைவி மக்களை பிரிந்து ஏழு வருடங்களாக நிர்கதியாக இருந்த இந்த சகோதரருக்கு சவுதி இளைஞர்கள் உதவி செய்து அவரது பெரும் கனவை நனவாக்கினர். உண்மையில் நபியவர்கள் காட்டித்தந்த முன்மாதிரியை இந்த இளைஞர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். உள்ளத்தை தொடும் இந்த விடியோவை கொஞ்சம் பார்த்தால் நன்றாக புரியும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் மனிதர்களுக்கு பிரயோசனமாக இந்த உலகில் வாழக்கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக!

அரபு மூலம் ஸபக் இனையம்

By: எம். றிஸ்கான் முஸ்தீன்


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &