ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவது மெய்யான பரீட்சார்த்தியா அல்லது அவரின் சார்பில் வேறும் யாருமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் எனவே முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கக் கூடாது. என அவர் கூறியுள்ளார்
நான் பரீட்சைக்குத் தோற்றிய பொரளை பரீட்சை நிலையமொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றினர். இது குறித்து பரீட்சை நிலையப் பொறுப்பாளரிடம் முறைப்பாடு செய்தேன். தேவையென்றால் பரீட்சார்த்தியின் அடையாளத்தை நிரூபிக்க ஹிஜாப்பை கழற்றிப் பார்க்க முடியும் என பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்
எனினும் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவியருக்கு மட்டும் விசேட சலுகை வழங்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சந்திசேவர தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ஜாதிக ஹெல உறுமயவினால் கடந்த மாதம் 31ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அக்கட்சியின் தேசிய ஊடகச் செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த சிறி வர்ணசிங்க முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தைப் பேணும் வகையில் அணிகின்ற ஹிஜாப் ஆடையை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்
குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்களது தலையை மூடி பாடசாலைகளுக்கம் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வது, பிரிவினையை ஏற்படுத்துவதாக படுமுட்டாள் தனமான கருத்தை தெரிவித்திருப்பதுடன், கிழக்கு மாகாண பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அபாயாக்களுக்குள் விடைத் தாள்களையும், ஹிஜாபுக்குள் கைத்தொலைபேசிகளையும் வைத்து பரீட்சையில் சித்தியடைகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
