பொதுநலவாய அமைப்பின் நோக்கங்கள் பற்றி இன்று நாம் பார்ப்போம். இதன் நோக்கங்கள் பற்றி முதன்முதலில் 1971 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட சிங்கப்ப+ர் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.
இதற்கமைய உலக சமாதானம், ஜனநாயகம், தனிநபர் விடுதலை,சமத்துவம், இனவாதத்திற்கான எதிர்ப்பு வறுமை, புறக்கணிப்பு மற்றும் நோய்களுக்கு எதிராக போராடுதல், சுதந்திர வர்த்தகம் ஆகிய விடயங்களில் அங்கத்துவ நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே இதன் நோக்கங்களாக அமைந்திருந்தன. ஆண் பெண் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எதிராக 1979 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட லுசாக்கா பிரகடனம், 1989 ஆம் ஆண்டு லங்காவி பிரகடனம் மூலம் முன்வைக்கப்பட்ட சூழலின் நிரந்தரத்தன்மை, 1991ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஹராரே பிகடனம் ஆகியவற்றின் மூலம் இந்த நோக்கங்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டன.
தற்போது பொதுநலவாய அமைப்பின் நோக்கங்கள் என்று பார்த்தால், 2003ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட அசோ ரொக் பிரகடனத்தில் விபரிக்கப்பட்டுள்ளவாறு ஜனநாயகத்தையும், அபிவிருத்தியையும் ஊக்குவிப்பதே பிரதான நோக்கங்களாக உள்ளன. இதற்கமைய,ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், ஆண் பெண் சமத்துவம்,உலகமயமாக்கலின் நன்மைகளை சமமாக பகிர்ந்து கொள்ளுதல்,பேன்ற இலக்குகளை அடைவதற்கு பொதுநலவாய அமைப்பு கடமைப்பட்டுள்ளது. இது தவிர, பொருளாதாரம், கல்வி, சட்டம்,சிறிய நாடுகள், விளையாட்டு, இளைஞர்கள் ஆகிய விடயங்களிலும் பொதுநலவாய அமைப்பு அதன் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
