பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் பொதுவான பொதுநலவாய கலாசார பாரம்பரியங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருவதைக் காணலாம்.
உதாரணமாக, விளையாட்டை எடுத்துக் கொண்டால் கிரிக்கட், ரக்பி, வலைப்பந்தாட்டம் அதேபோல்,இடப்பக்கமாக அமர்ந்து வாகனம் ஓட்டுதல்,பாராளுமன்ற ஜனநாயகத்தில் வெஸ்மின்ஸ்டர் முறையை பின்பற்றுதல், பொதுவான சட்டவாக்கம், ஆங்கில மொழிப் பிரயோகம், இராணுவ மற்றும் கடற்படை தரங்கள், அமெரிக்க ஆங்கிலப் பிரயோகத்தையும் விட பிரித்தானிய ஆங்கிலத்தை கூடுதலாக பிரயோகித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அரசியலமைப்பை எடுத்துக் கொண்டால், பொதுநலவாய அமைப்பு நாடுகள் மத்தியில் ஒரே மாதிரியான சட்ட மற்றும் அரசியல் முறைகளே பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலான நாடுகள் ஆங்கில சட்டத்தையே பொதுச் சட்டமாக பயன்படுத்துகின்றன.
அதேபோல், பொதுநலவாய தினமும் மார்ச் மாதத்தின் இரண்டாவது திங்கட் கிழமையில் அனைத்து நாடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது
By Junaid M Haris
