ஹலால் சான்றிதழ் முறைமைக்கு எதிராக பௌத்த அமைப்பான பொதுபல சேனா போராட்டம் நடத்த உள்ளது.
ஹலால் சான்றிதழ் முறையை இல்லாதொழிக்குமாறு கோரி, பொதுபல சேனா இன்று கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வாகனத் தொடரணி ஒன்றை நடாத்த உள்ளது.
கட்சியின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள கிருலப்பனையிலிருந்து, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வரையில் இந்த வாகனத் தொடரணி முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த வாகனத் தொடரணியின் பின்னர் மாலை தலதா மாளிகையில் அதிஷ்டான பூஜையொன்றும் நடத்தப்பட உள்ளது.
