BREAKING NEWS

Oct 21, 2013

Crown Casino விளம்பரத் தூதுவராக மைக்கல் கிளார்க்?


கொழும்பில் உருவாக்கப்படவுள்ள கேளிக்கை விடுதிக்கான விளம்பரத் தூதுவராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
4000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான உயர்தர கேளிக்கை விடுதியான "கிறௌண் கேளிக்கை விடுதி" (Crown Casino) இன் விளம்பரத் தூதுவராகவே மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கொழும்பில் 450 அறைகள் கொண்ட மிகப்பெரும் கேளிக்கை விடுதியொன்றை உருவாக்க அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கர் என்ற தொழிலதிபர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, அவரது கேளிக்கை விடுதியை அமைப்பதற்கான முடிவு விரைவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மைக்கல் கிளார்க் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியொன்றில், இலங்கையில் தனக்கு அதிகமான நண்பர்கள் காணப்படுவதாகவும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான விருந்தோம்பலில் தொழிற்துறையொன்றைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் பங்களிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் இந்த கேளிக்கை விடுதியை அமைப்பதா, இல்லையா என்பது தொடர்பான முடிவை இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள விவாவத்தின் முடிவில் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &