BREAKING NEWS

Oct 29, 2013

2014 BANGLADESH T20 WORLD CUP கிரிக்கெட் அட்டவணை வெளியீடு


பங்களாதேஷில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் ஏ குழுவில் இலங்கை, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி குழுவில் நடப்புச் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், அணியுடன், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
கடந்த காலங்களைப் போன்று இந்தப் போட்டிகளையும் பங்களாதேஷ் வெற்றிகரமாக நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை பெண்களுக்கான உலக கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் ஏ குழுவில்  இடம்பெற்றுள்ளன.
அத்துடன் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பி குழுவிற்கு பெயரிடப்பட்டுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &