
ஜோகன்ன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தலையில் பந்து தாக்கி உயிரிழந்தார்.
தென் ஆப்ரிக்காவில் நேற்று உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், டார்ரின் ராண்டால்(32) என்ற உள்ளூர் கிரிக்கெட் வீரர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தலையில் பந்து வேகமாக தாக்கியது.
இதில் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராண்டால் மறைவுக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.