
கொழும்பில் இன்று தேங்காயின் விலை 35 ரூபாவிற்கும், 50 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகையில் காணப்பட்டது.
கொழும்பை அண்மித்த நகரங்களிலும் இந்த நிலமையையே காணமுடிகின்றது.
கடந்த சில வாரங்களாக தேங்காயின் விலை அதிகரித்துச் செல்வது தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.
மொத்த விலையை நோக்கும் போது குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்ய முடியாது என சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மொத்தமாக 100 தேங்காய்களை 4000 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய வேண்டி ஏற்படுகின்றது. அதாவது ஒரு தேங்காயின் விலை 40 ரூபாவாக காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பல்வேறு பிரசினைகள் காரணமாக தெங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு ஏக்கருக்கருக்கு 500 தேங்காய்களையாவது உற்பத்தி செய்ய வேண்டும். எனினும் தற்பொழுது 300 அல்லது 350 தேங்காங்களைக் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.